பிக்பாஷ் டி20 லீக்: பிரிஸ்பேனை வீழ்த்தி சிட்னி அபார வெற்றி


பிக்பாஷ் டி20 லீக்: பிரிஸ்பேனை வீழ்த்தி சிட்னி அபார வெற்றி
x

பிரிஸ்பேன் ஹீட் 20 ஓவர்கள் முடிவில் 171 ரன்கள் எடுத்தது.

மெல்போர்ன்,

ஆஸ்திரேலியாவில் பிக் பாஷ் டி20 லீக் நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற 40வது லீக் ஆட்டத்தில் பிரிஸ்பேன் ஹீட், சிட்னி சிக்ஸர்ஸ் அணிகள் மோதின. இதில், டாஸ் வென்ற சிட்னி பந்து வீச்சை தேர்வு செய்தது.

இதையடுத்து களமிறங்கிய பிரிஸ்பேன் ஹீட் 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 171 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் நாதன் மெக்ஸ்வீனி அதிகபட்சமாக 69 ரன்கள் சேர்த்தார்.

இதனை தொடர்ந்து 172 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற சவாலான இலக்குடன் சிட்னி களமிறங்கியது. அந்த அணியின் தொடக்க வீரர்கள் பாபர் அசாம் 1 ரன்னில் அவுட் ஆனார். அடுத்து வந்த பிலிப் 8 ரன்னில் அவுட் ஆனார். பின்னர் வந்த கேப்டன் ஹென்ரிக்ஸ் 24 ரன்னிலு அவுட் ஆனார். இதனை தொடர்ந்து சாம் கரனுடன் ஜோடி சேர்ந்த ஸ்மித் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ஸ்மித் 54 ரன்கள் எடுத்த நிலையில் அவுட் ஆனார். இறுதியில் சிட்னி 18.4 ஓவரில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 177 ரன்கள் எடுத்தது. சாம் கரன் 53 ரன்கள் எடுத்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். இதன் மூலம் பிரிஸ்பேனை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி சிட்னி அபார வெற்றிபெற்றது.

1 More update

Next Story