சையத் முஷ்டாக் அலி கோப்பை; 4வது அணியாக அரையிறுதிக்கு முன்னேறியது டெல்லி

டெல்லி தரப்பில் அதிரடியாக ஆடிய அனுஜ் ராவத் 33 பந்தில் 73 ரன்கள் எடுத்தார்.
Image Courtesy: @BCCIdomestic / X (Twitter)
Image Courtesy: @BCCIdomestic / X (Twitter)
Published on

பெங்களூரு,

7-வது சையத் முஷ்டாக் அலி டி20 கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இதில் லீக் சுற்று மற்றும் காலிறுதிக்கு முந்தைய சுற்று ஆட்டங்களின் முடிவில் மும்பை, விதர்பா, டெல்லி, பரோடா, மத்திய பிரதேசம், சவுராஷ்டிரா, பெங்கால், உத்தரபிரதேசம் அணிகள் காலிறுதிக்கு முன்னேறின.

இந்நிலையில், சையத் முஷ்டாக் அலி கோப்பை தொடரின் காலிறுதி ஆட்டங்கள் இன்று நடைபெற்றன. இதில் இன்று நடைபெற்ற கடைசி காலிறுதி ஆட்டத்தில் டெல்லி - உத்தரபிரதேசம அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணி 20 ஓவர்களில் 3 விக்கெட்டை மட்டும் இழந்து 193 ரன்கள் குவித்தது.

டெல்லி தரப்பில் அதிரடியாக ஆடிய அனுஜ் ராவத் 33 பந்தில் 73 ரன்கள் எடுத்தார். உத்தரபிரதேசம் தரப்பில் மோஷின் கான், வினித் பன்வார், நிதிஷ் ராணா ஆகியோர் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். தொடர்ந்து 194 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய உத்தரபிரதேசம் 20 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 174 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது.

இதன் மூலம் 19 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற டெல்லி 4வது அணியாக அரையிறுதிக்கு முன்னேறியது. இந்த தொடரின் அரையிறுதி ஆட்டங்கள் வரும் 13ம் தேதி பெங்களூருவில் நடக்கிறது. 

X

Daily Thanthi
www.dailythanthi.com