

20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதி ஆட்டம் அகமதாபாத்தில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இதன்படி, முதலில் பேட்டிங்கை தொடங்கிய இந்திய அணி சரவெடியாக வெடித்தது. இந்திய அணியின் துவக்க வீரர்களான சஞ்சு சம்சன் ( 89 ரன்கள்), அபிஷேக் சர்மா (52 ரன்கள்), இஷான் கிஷான் (54) என அதிரடி காட்டினர். சிக்சர் மழையாக இந்திய அணி பொழிந்தது.
தெரியாமல் பேட்டிங் கொடுத்துவிட்டோமோ என நியூசிலாந்து நினைக்கும் அளவுக்கு இந்திய அணியின் பேட்டிங் இருந்தது. இந்திய அணி 300 ரன்கள் எட்டினாலும் ஆச்சர்யப்படுவதற்கு இல்லை என்று சொலும் அளவிற்கு சிக்சர்களும் பவுண்டரிகளுமாக பறந்தன.
ஆனால் 15 ஓவருக்கு பிறகு நிலமை அப்படியே மாறியது. சஞ்சு சாம்சன் அவுட் ஆனதும் இந்திய அணியின் ரன்ரேட் குறைய தொடங்கியது. சூர்யகுமார் யாதவ் டக் அவுட் ஆனார். ஹர்திக் பாண்ட்யா 18 ரன்களில் அவுட் ஆனார். இன்னிங்ஸின் துவக்கத்தில் இருந்த வேகம் முடிவில் இல்லாததால் இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 255 ரன்கள் எடுத்துள்ளது. இதன் மூலம் நியூசிலாந்து அணிக்கு 256 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.