டி20 கிரிக்கெட்: கடந்த இரு நாட்களில் 3 ரன்களில் சதத்தை தவறவிட்ட 3 வீரர்கள்.. சுவாரசிய நிகழ்வு

இதில் 3 வீரர்களுமே ஆட்டமிழக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை,
18-வது ஐ.பி.எல். தொடரில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின. இதில் ராஜஸ்தான் நிர்ணயித்த 152 ரன்கள் இலக்கை நோக்கி ஆடிய கொல்கத்தா அணிக்கு குயிண்டன் டி காக் 97 ரன்கள் அடித்து வெற்றியை தேடி கொடுத்தார்.
மறுபுறம் நியூசிலாந்து - பாகிஸ்தான் இடையே 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் கடைசி ஆட்டம் நேற்று நடைபெற்றது. அதில் பாகிஸ்தான் நிர்ணயித்த 129 ரன்கள் இலக்கை நோக்கி ஆடிய நியூசிலாந்து அணிக்கு டிம் சீபர்ட் அதிரடியாக விளையாடி வெறும் 38 பந்துகளில் 97 ரன்கள் குவித்து வெற்றி பெற்று கொடுத்தார்.
அதேபோல் ஐ.பி.எல். தொடரில் நேற்று முன்தினம் நடைபெற்ற குஜராத்துக்கு எதிரான ஆட்டத்தில் பஞ்சாப் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் 97 ரன்கள் அடித்து அணியை வெற்றி பெற வைத்தார்.
இப்படி கடந்த இரு நாட்களில் மட்டும் டி20 கிரிக்கெட்டில் (சர்வதேசம் மற்றும் உள்ளூர் தொடர்கள்) 3 வீரர்கள் 97 ரன்கள் அடித்து 3 ரன்களில் சதத்தை தவறவிட்டுள்ள சுவாரசிய நிகழ்வு அரங்கேறியுள்ளது. இதில் மூவரும் ஆட்டமிழக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அதிலும் டி காக் மற்றும் டிம் சீபர்ட் சேசிங்கின்போது ஆட்டமிழக்காமல் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.






