டி20 கிரிக்கெட்: இந்தியா- இங்கிலாந்து இன்று மோதல்

தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான தொடரை 1-4 என்ற கணக் கில் இழந்து ஏமாற்றம் அளித்தது.

டி20 கிரிக்கெட்: இந்தியா- இங்கிலாந்து இன்று மோதல்
Published on

செம்ஸ்போர்டு,

10-வது பெண்கள் 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி அடுத்த மாதம் (ஜூன்) 12-ந் தேதி முதல் ஜூலை 5-ந் தேதி வரை இங்கி லாந்து மற்றும் வேல்சில் நடக்கிறது. இதற்கு தயாராகும் பொருட்டு ஹர்மன்பிரீத் கவுர் தலை மையிலான இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி, இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து அந்த நாட்டு அணிக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ஆடுகிறது. இதன்படி இந் தியா-இங்கிலாந்து அணிகள் இடையிலான முத லாவது டி20 கிரிக்கெட் போட்டி செம்ஸ்போர்டுவில் இன்று (வியாழக்கிழமை) நடக்கிறது. சமீ பத்தில் இலங்கை, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 20 ஓவர் தொடர்களை வென்ற இந்திய அணி கடந்த மாதம் தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான தொடரை 1-4 என்ற கணக் கில் இழந்து ஏமாற்றம் அளித்தது.

தங்களது குறைகளை சரி செய்து இந்திய அணி மீண்டும் எழுச்சி பெற முயற்சிக்கும். கடந்த ஆண்டு நடந்த இங்கிலாந்து தொடரை (3-2) முதல்முறையாக கைப்பற்றிய இந்திய அணி நம்பிக்கையுடன் களம் இறங்கும் என்பதில் சந்தேகமில்லை.

X

Daily Thanthi
www.dailythanthi.com