டி20 கிரிக்கெட்: என்னுடைய 175 ரன் சாதனையை இந்த 4 பேரால்தான் முறியடிக்க முடியும் - கிறிஸ் கெயில்


டி20 கிரிக்கெட்: என்னுடைய 175 ரன் சாதனையை இந்த 4 பேரால்தான் முறியடிக்க முடியும் - கிறிஸ் கெயில்
x

image courtesy:PTI

தினத்தந்தி 8 Sept 2025 3:55 PM IST (Updated: 8 Sept 2025 4:35 PM IST)
t-max-icont-min-icon

டி20 கிரிக்கெட்டில் அதிகபட்ச ரன் அடித்த வீரர் என்ற உலக சாதனையை கிறிஸ் கெயில் (175) தன்வசம் வைத்துள்ளார்.

கயானா,

வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணியின் முன்னாள் அதிரடி வீரர் கிறிஸ் கெயில். வெளிநாட்டு வீரராக இருந்தாலும் இவருடைய அதிரடி ஆட்டத்திற்கு இந்தியாவில் தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. தனது அதிரடி ஆட்டத்தால் உலகளவில் உள்ள கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் நீங்காத இடத்தை பிடித்தவர் .

இதனிடையே கடந்த 2013-ம் ஆண்டு நடந்த ஐ.பி.எல். தொடரில் நடந்த ஒரு ஆட்டத்தில் புனே வாரியர்ஸ் இந்தியா - ராயல் சேலஞ்சர்ஸ் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் பெங்களூரு அணிக்காக ஆடிய கிறிஸ் கெயில் 66 பந்துகளில்175 ரன்களை குவித்தார். அதுவே இதுவரை டி20 போட்டிகளில் அடிக்கப்பட்ட தனிநபர் அதிகபட்ச ரன்களாக இருந்து வருகிறது. இதன் மூலம் டி20 கிரிக்கெட்டில் அதிகபட்ச ரன் அடித்த வீரர் என்ற உலக சாதனையை கிறிஸ் கெயில் தன்வசம் வைத்துள்ளார். கடந்த 12 ஆண்டுகளில் இதுவரை யாராலும் அந்த சாதனையை முறியடிக்க முடியவில்லை.

இந்த சூழலில் சமீபத்திய நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட கிறிஸ் கெயில் தன்னுடைய இந்த சாதனையை முறியடிக்க வாய்ப்புள்ள 4 வீரர்களை தேர்வு செய்து அறிவித்துள்ளார். கிறிஸ் கெயில் தேர்வு செய்தவர்களில் 3 இந்திய வீரர்களும், ஒரு வெஸ்ட் இண்டீஸ் வீரரும் இடம்பெற்றுள்ளனர்.

அந்த வகையில் கிறிஸ் கெயில் தேர்வு 4 வீரர்கள் விவரம்:

1. சுப்மன் கில்

2. ஜெய்ஸ்வால்

3. அபிஷேக் சர்மா

4. நிக்கோலஸ் பூரன்

1 More update

Next Story