டி20 கிரிக்கெட்: 2-வது இந்திய வீரராக வரலாற்று சாதனை படைத்த ரோகித் சர்மா


டி20 கிரிக்கெட்: 2-வது இந்திய வீரராக வரலாற்று சாதனை படைத்த ரோகித் சர்மா
x

இந்த பட்டியலில் விராட் கோலி முதலிடத்தில் உள்ளார்.

ஐதராபாத்,

10 அணிகள் பங்கேற்றுள்ள 18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் ஐதராபாத்தில் நேற்றிரவு அரங்கேறிய 41-வது லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் - மும்பை இந்தியன்ஸ் அணிகள் மல்லுக்கட்டின. இதில் டாஸ் வென்ற மும்பை கேப்டன் ஹர்திக் பாண்ட்யா பந்துவீச்சை தேர்வு செய்தார்.

அதன்படி முதலில் பேட்டிங் செய்த ஐதராபாத் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 8 விக்கெட்டுக்கு 143 ரன்கள் அடித்தது. அதிகபட்சமாக கிளாசென் 71 ரன்கள் அடித்தார். மும்பை தரப்பில் வேகப்பந்து வீச்சாளர் டிரென்ட் பவுல்ட் 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

பின்னர் 144 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி ஆடிய மும்பை அணி 15.4 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 146 ரன்கள் சேர்த்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அதிகபட்சமாக ரோகித் சர்மா 70 ரன்கள் அடித்தார். பவுல்ட் ஆட்டநாயகன் விருது பெற்றார்.

இந்த ஆட்டத்தில் அடித்த 70 ரன்களையும் சேர்த்து ரோகித் சர்மா டி20 கிரிக்கெட்டில் 12 ஆயிரம் ரன்களை கடந்துள்ளார். இதன் மூலம் டி20 கிரிக்கெட் வரலாற்றில் 12 ஆயிரம் ரன்களை கடந்த 2-வது இந்திய வீரர் என்ற வரலாற்று சாதனையை படைத்துள்ளார். இந்த பட்டியலில் 13, 208 ரன்களுடன் விராட் கோலி முதலிடத்தில் உள்ளார்.

ஒட்டு மொத்தத்தில் இந்த சாதனையை படைத்த 8-வது வீரர் ரோகித் சர்மா ஆவார்.

அந்த பட்டியல்:

1. கிறிஸ் கெயில் - 14,562 ரன்கள்

2. அலேக்ஸ் ஹெல்ஸ் - 13,610 ரன்கள்

3. சோயப் மாலிக் - 13,571 ரன்கள்

4. பொல்லார்டு - 13,537 ரன்கள்

5. விராட் கோலி - 13,208 ரன்கள்

6. டேவிட் வார்னர் - 13,019 ரன்கள்

7. பட்லர் - 12,469 ரன்கள்

8. ரோகித் சர்மா - 12,058 ரன்கள்

1 More update

Next Story