

அகமதாபாத்,
ஐ.பி.எல். தொடரில் நேற்று கொல்கத்தாவில் நடந்த 60-வது லீக் போட்டியில் கொல்கத்தா சாய் சுதர்சன் 53 ரன்கள் எடுத்தார். அப்போது சாய் சுதர்சன் டி20 போட்டிகளில் 3000 ரன்களை கடந்தார். இதன் மூலம் சாய் சுதர்சன் டி20 கிரிக்கெட்டில் வரலாற்று சாதனை ஒன்றை படைத்துள்ளார்.
அதாவது, டி20 கிரிக்கெட்டில் மிகக் குறைந்த இன்னிங்ஸ்களில் (78 இன்னிங்ஸ்) 3,000 ரன்களைக் கடந்த வீரர் என்ற உலக சாதனையை சாய் சுதர்சன் படைத்தார். ஏற்கனவே, ஆஸ்திரேலியாவின் ஷான் மார்ஷ் 85 இன்னிங்ஸ்களில் 3000 ரன்கள் எடுத்ததே சாதனையாக இருந்தது. தற்போது சாய் சுதர்சன் 78 இன்னிங்ஸ்களில் 3000 ரன்களை கடந்து ஷான் மார்ஷின் சாதனையை முறியடித்துள்ளார்.