டி20 போட்டி; பாகிஸ்தானின் சோயப் மாலிக் வெளியேறினார்

வங்காளதேசத்திற்கு எதிரான 3வது டி20 போட்டியில் பாகிஸ்தானின் சோயப் மாலிக் விளையாடாமல் வெளியேறி உள்ளார்.
டி20 போட்டி; பாகிஸ்தானின் சோயப் மாலிக் வெளியேறினார்
Published on

டாக்கா,

வங்காளதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் கிரிக்கெட் அணி 3 டி20, 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இரு அணிகளும் மோதிய முதல் டி20 போட்டியில் பாகிஸ்தான் வெற்றி பெற்றது. அதனை தொடர்ந்து டாக்காவில் நேற்று முன்தினம் நடந்த 2வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டியிலும் பாகிஸ்தான் வெற்றி பெற்றது.

இதனால், 3 போட்டிகள் கொண்ட தொடரில் 2-0 என்ற புள்ளி கணக்கில் பாகிஸ்தான் முன்னணியில் உள்ளது. இன்று நடைபெற உள்ள 3வது போட்டியில் வெற்றி பெற்று தொடரை முழுவதும் கைப்பற்ற முனைப்புடன் உள்ளது.

இந்த நிலையில், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில், வங்காளதேசத்திற்கு எதிரான 3வது மற்றும் இறுதி டி20 போட்டியில், தனது குழந்தையின் உடல்நல குறைவை முன்னிட்டு பாகிஸ்தான் பேட்ஸ்மேன் சோயப் மாலிக் விளையாடவில்லை என்று தெரிவித்து உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com