டி20 தரவரிசை: முதலிடத்திற்கு முன்னேறிய தீப்தி ஷர்மா

இந்திய வீராங்கனை தீப்தி ஷர்மா முதல் முறையாக முதலிடத்திற்கு முன்னேறியுள்ளார் .
டி20 தரவரிசை: முதலிடத்திற்கு முன்னேறிய தீப்தி ஷர்மா
Published on

மும்பை,

சர்வேதச டி20  கிரிக்கெட் போட்டியின் புதிய பந்துவீச்சாளர்கள் தரவரிசை பட்டியலை ஐசிசி இன்று வெளியிட்டுள்ளது.இதில் இந்திய வீராங்கனை தீப்தி ஷர்மா முதல் முறையாக முதலிடத்திற்கு முன்னேறியுள்ளார். சமீபத்தில் நடைபெற்ற இலங்கை அணிக்கு எதிரான டி20 போட்டியில் 4 ஓவர்களில் 20 ரன்கள் மட்டும் விட்டுக்கொடுத்து ஒரு விக்கெட் வீழ்த்தினார்.

இதனால் தீப்தி ஷர்மா 737 புள்ளிகள் பெற்று, ஆஸ்திரேலிய வீராங்கனை அனபெல்லா சதர்லாந்தை (736 புள்ளி ) பின்னுக்கு தள்ளி முதலிடத்திற்கு முன்னேறியுள்ளார். பாகிஸ்தான் வீராங்கனை சதியா இக்பால் 3வது இடத்திலும், இங்கிலாந்து வீராங்கனைகள் சோபி 4வது இடத்திலும், லாரன் பெல் 5வது இடத்திலும் உள்ளனர். 

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com