டி20 தரவரிசை - நம்பர் 1 இடத்தில் தொடரும் இந்தியா

இங்கிலாந்து 262 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது.
டி20 தரவரிசை -  நம்பர் 1 இடத்தில் தொடரும் இந்தியா
Published on

மும்பை,

இந்திய அணி, ஐசிசி ஆண்கள் டி20 தரவரிசையில் தொடர்ந்து முதலிடத்தில் நீடித்து வருகிறது. நேற்று வெளியிடப்பட்ட சமீபத்திய தரவரிசை பட்டியலின்படி, இந்தியா 275 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது.

முதலிடத்தில் இந்தியா... பின்தொடரும் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா

இந்தியாவுக்கு அடுத்தபடியாக இங்கிலாந்து 262 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்திலும், ஆஸ்திரேலியா 258 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்திலும் உள்ளன.

முதல் 7 இடங்களில் மாற்றமில்லை

தரவரிசையின் முதல் ஏழு இடங்களில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை.

4வது இடம் – நியூசிலாந்து

5வது இடம் – தென் ஆப்பிரிக்கா

6வது இடம் – பாகிஸ்தான்

7வது இடம் – வெஸ்ட் இண்டீஸ்

இலங்கை சரிவு... முன்னேறிய வங்காளதேசம்

இலங்கை 6 ரேட்டிங் புள்ளிகளை இழந்து 9வது இடத்திற்கு சரிந்துள்ளது. இதனால் வங்காளதேசம் 8வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. அதேநேரம் ஆப்கானிஸ்தான் 10வது இடத்திலும், ஜிம்பாப்வே 11வது இடத்திலும், அயர்லாந்து 12வது இடத்திலும் நீடிக்கின்றன.

அமெரிக்காவின் அபார முன்னேற்றம்

கிரிக்கெட்டில் வேகமாக வளர்ந்து வரும் அணிகளில் ஒன்றான அமெரிக்கா, 6 புள்ளிகள் பெற்று 13வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. இதன் மூலம் நெதர்லாந்து, ஸ்காட்லாந்து அணிகளை பின்னுக்குத் தள்ளியுள்ளது. நேபாளம் மற்றும் ஓமன் அணிகள் தலா ஒரு இடம் முன்னேறி முறையே 17 மற்றும் 19-வது இடங்களைப் பிடித்துள்ளன. இத்தாலி, 11 புள்ளிகளுடன் 26-வது இடத்திலிருந்து 23-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com