ஆஸி.க்கு எதிரான டி20 தொடர்: இந்திய அணியிலிருந்து குல்தீப் யாதவ் விடுவிப்பு.. காரணம் என்ன..?


ஆஸி.க்கு எதிரான டி20 தொடர்: இந்திய அணியிலிருந்து குல்தீப் யாதவ் விடுவிப்பு.. காரணம் என்ன..?
x

இந்தியா - ஆஸ்திரேலியா இடையே 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெற்று வருகிறது.

மும்பை,

ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் கான்பெர்ராவில் நடந்த முதலாவது ஆட்டம் மழையால் பாதியில் ரத்து செய்யப்பட்டது. மெல்போர்னில் நடந்த 2-வது ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்தது.

இதனையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 3-வது போட்டி ஹோபர்ட்டில் இன்று நடைபெற்றது. இதில் இந்திய அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையை எட்டியுள்ளது.

இதனையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 4-வது போட்டி வருகிற 6-ம் தேதியும், 5-வது மற்றும் கடைசி போட்டி 8-ம் தேதியும் நடைபெற உள்ளன.

இந்நிலையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான எஞ்சிய டி20 தொடரில் இருந்து குல்தீப் யாதவ் விடுவிக்கப்பட்டுள்ளார். இதனை பி.சி.சி.ஐ. அதிகாராபூர்வமாக அறிவித்துள்ளது.

இதற்கான காரணம் என்னவெனில், எதிர்வரும் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்காக தயாராகும் பொருட்டு தற்போது நடைபெற்று வரும் இந்தியா ஏ - தென் ஆப்பிரிக்கா ஏ இடையிலான டெஸ்ட் தொடரின் 2-வது போட்டியில் அவரை விளையாட வைக்க பி.சி.சி.ஐ. முடிவெடுத்துள்ளது. அதன் காரணமாகவே குல்தீப் ஆஸ்திரேலிய டி20 தொடரில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.

இதனையடுத்து தாயகம் திரும்பும் அவர், வரும் 6-ம் தேதி தொடங்க உள்ள இந்தியா ஏ - தென் ஆப்பிரிக்கா ஏ இடையிலான 2-வது டெஸ்ட் போட்டியில் களமிறங்க உள்ளார். இந்த தொடரில் இந்திய அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

1 More update

Next Story