வங்காளதேசத்திற்கு எதிரான டி20 தொடர்: நெதர்லாந்து அணி அறிவிப்பு.. 17 வயது வீரருக்கு இடம்


வங்காளதேசத்திற்கு எதிரான டி20 தொடர்: நெதர்லாந்து அணி அறிவிப்பு.. 17 வயது வீரருக்கு இடம்
x

image courtesy:ICC

வங்காளதேசம் - நெதர்லாந்து முதல் டி20 போட்டி வரும் 30-ம் தேதி நடைபெற உள்ளது.

ஆம்ஸ்டர்டாம்,

நெதர்லாந்து கிரிக்கெட் அணி வங்காளதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாட உள்ளது. அதன்படி இவ்விரு அணிகள் இடையிலான முதல் டி20 போட்டி வரும் 30-ம் தேதி சில்ஹெட்டில் நடைபெற உள்ளது. 2 மற்றும் 3-வது போட்டிகள் முறையே செப்டம்பர் 1 மற்றும் 3-ம் தேதிகளில் இதே மைதானத்தில் நடைபெற உள்ளன.

இந்நிலையில் இந்த தொடருக்கான நெதர்லாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ஸ்காட் எட்வர்ட்ஸ் தலைமையிலான அந்த அணியில் 17 வயதே ஆன பேட்ஸ்மேன் செட்ரிக் டி லாங்கே அறிமுக வீரராக இடம்பெற்றுள்ளார்.

நெதர்லாந்து அணி விவரம் பின்வருமாறு:

ஸ்காட் எட்வர்ட்ஸ் (கேப்டன்), நோவா குரோஸ், மேக்ஸ் ஓ'டவுட், விக்ரம்ஜித் சிங், தேஜா நிடமானுரு, சிக்கந்தர் சுல்பிகர், செட்ரிக் டி லாங்கே, கைல் க்ளீன், ஆர்யன் தத், பால் வான் மீகெரென், ஷாரிஸ் அகமது, பென் பிளெட்சர், டேனியல் டோரம், செபாஸ்டியன் பிராட், டிம் பிரிங்கிள்.

டி20 தொடர் அட்டவணை:

முதல் போட்டி - ஆகஸ்ட் 30 - சில்ஹெட்

2வது போட்டி - செப்டம்பர் 1 - சில்ஹெட்

3வது போட்டி - செப்டம்பர் 3 - சில்ஹெட்

1 More update

Next Story