வங்காளதேசத்திற்கு எதிரான டி20 தொடர்: 2 முக்கிய இந்திய வீரர்களுக்கு ஓய்வு..? வெளியான தகவல்

இந்தியா - வங்காளதேசம் இடையிலான டி20 தொடர் வரும் அக்டோபர் 6-ம் தேதி தொடங்க உள்ளது.
image courtesy: AFP
image courtesy: AFP
Published on

மும்பை,

வங்காளதேச கிரிக்க்ட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் மற்றும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர்களில் விளையாட உள்ளது. இதில் முதலில் டெஸ்ட் தொடர் நடைபெற உள்ளது.

டெஸ்ட் தொடர் நிறைவடைந்த உடன் இவ்விரு அணிகளுக்கு இடையிலான டி20 தொடர் வரும் அக்டோபர் 6-ம் தேதி தொடங்க உள்ளது.

இந்நிலையில் இந்த டி20 தொடருக்கான இந்திய அணியில் சுப்மன் கில் மற்றும் ரிஷப் பண்ட் ஆகியோருக்கு ஓய்வளிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஏனெனில் வங்காளதேச தொடர் முடிந்தவுடன் அடுத்த சில தினங்களிலேயே நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடர் ஆரம்பிக்க இருக்கிறது. இதன் காரணமாக அவர்களது பணிச்சுமையை கருத்தில் கொண்டு ஓய்வு அளிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com