அயர்லாந்துக்கு எதிரான டி20 தொடர்: புதிய கேப்டன் தலைமையில் களமிறங்கும் இங்கிலாந்து


அயர்லாந்துக்கு எதிரான டி20 தொடர்: புதிய கேப்டன் தலைமையில் களமிறங்கும் இங்கிலாந்து
x

image courtesy:ICC

தினத்தந்தி 15 Aug 2025 10:52 PM IST (Updated: 16 Aug 2025 10:11 PM IST)
t-max-icont-min-icon

இங்கிலாந்து டி20 அணியின் வழக்கமான கேப்டனான ஹாரி புரூக்கிற்கு இந்த தொடரில் ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.

லண்டன்,

இங்கிலாந்து கிரிக்கெட் அணி அயர்லாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாட உள்ளது. அதன்படி இவ்விரு அணிகள் இடையிலான முதல் டி20 போட்டி செப்டம்பர் 17-ம் தேதி நடைபெற உள்ளது. 2 மற்றும் 3-வது போட்டிகள் முறையே செப்.19 மற்றும் 21-ம் தேதிகளில் நடைபெற உள்ளன.

இந்நிலையில் இந்த தொடருக்கான இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்து டி20 அணியின் வழக்கமான கேப்டனான ஹாரி புரூக்கிற்கு இந்த தொடரில் ஓய்வளிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக இங்கிலாந்து அணி இந்த தொடரில் புதிய கேப்டன் ஜேக்கப் பெத்தேல் (வயது 21) தலைமையில் களமிறங்க உள்ளது.

இதன் மூலம் இங்கிலாந்து அணியின் இளம் வயது கேப்டன் என்ற பெருமையை ஜேக்கப் பெத்தேல் பெற்றுள்ளார். இந்த அணியில் ஜோஸ் பட்லர், பில் சால்ட் போன்ற முன்னணி வீரர்கள் இடம்பெற்றுள்ளனர்.

இங்கிலாந்து அணி விவரம் பின்வருமாறு:-

ஜேக்கப் பெத்தேல் (கேப்டன்), ரெஹான் அகமது, சோனி பேக்கர், டாம் பான்டன், ஜோஸ் பட்லர், லியாம் டாசன், டாம் ஹார்ட்லி, வில் ஜாக்ஸ், சாகிப் மஹ்மூத், ஜேமி ஓவர்டன், மேத்யூ பாட்ஸ், அடில் ரஷீத், பில் சால்ட், லூக் வுட்.

1 More update

Next Story