நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடர்: ஆஸி. அணியின் அதிரடி வீரர் விலகல்

இவருக்கு மாற்று வீரராக அலெக்ஸ் கேரி அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
சிட்னி,
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி அடுத்த மாதம் (அக்டோபர்) நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாட உள்ளது. அதன்படி இவ்விரு அணிகள் இடையிலான முதல் டி20 போட்டி அக்டோபர் 1-ம் தேதியும், 2-வது போட்டி 3-ம் தேதியும், 3-வது மற்றும் கடைசி போட்டி அக்டோபர் 4-ம் தேதியும் நடைபெற உள்ளது.
இந்த தொடருக்கான ஆஸ்திரேலிய அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. மிட்செல் மார்ஷ் தலைமையிலான அந்த அணியில் அதிரடி விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான ஜோஷ் இங்கிலிஸ் இடம்பெற்றிருந்தார். இந்நிலையில் தசை வலி காரணமாக இந்த தொடரிலிருந்து ஜோஷ் இங்கிலிஸ் விலகியுள்ளார். அவருக்கு பதிலாக மற்றொரு விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான அலெக்ஸ் கேரி அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
ஆஸ்திரேலிய அணி விவரம் பின்வருமாறு:- மிட்செல் மார்ஷ் (கேப்டன்), சீன் அபோட், சேவியர் பார்ட்லெட், டிம் டேவிட், பென் துவார்ஷுயிஸ், ஜோஷ் ஹேசில்வுட், டிராவிஸ் ஹெட், அலெக்ஸ் கேரி, மேட் குஹ்னேமன், கிளென் மேக்ஸ்வெல், மிட்ச் ஓவன், மேத்யூ ஷார்ட், மார்கஸ் ஸ்டோய்னிஸ், ஆடம் ஜம்பா.






