ஸ்காட்லாந்துக்கு எதிரான டி20 தொடர்; ஜோஷ் ஹேசில்வுட் விலகல் - காரணம் என்ன..?

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி அடுத்த மாதம் ஸ்காட்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு டி20 தொடரில் ஆட உள்ளது.
Image Courtesy: AFP
Image Courtesy: AFP
Published on

மெல்போர்ன்,

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி அடுத்த மாதம் ஸ்காட்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ஆட உள்ளது. இந்த தொடர் செப்டம்பர் 4ம் தேதி முதல் 7ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த தொடரின் மூன்று போட்டிகளும் எடின்பர்க்கில் நடைபெறுகிறது.

இந்த தொடருக்கான ஆஸ்திரேலிய அணி கடந்த சில தினங்களுக்கு முன்னர் அறிவிக்கப்பட்டது. அந்த அணியில் வேகப்பந்து வீச்சாளர் ஜோஷ் ஹேசில்வுட் இடம் பெற்றிருந்தார். தற்போது அந்த தொடரில் இருந்து ஹேசில்வுட் விலகி உள்ளதாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.

காலில் ஏற்பட்ட காயம் காரணமாக ஸ்காட்லாந்துக்கு எதிரான தொடரில் இருந்து ஹேசில்வுட் விலகி உள்ளதாகவும் அவருக்கு பதிலாக ரிலே மெரிடித் அணியில் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்துக்கு எதிரான தொடருக்கு முன் ஹேசில்வுட் குணமடைந்துவிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com