தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடர்: இந்திய முன்னணி ஆல் ரவுண்டர் விலகல்

இந்தியா - தென் ஆப்பிரிக்கா இடையே 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெற்று வருகிறது.
image courtesy:PTI
image courtesy:PTI
Published on

மும்பை,

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் முடிவடைந்துள்ள 3 போட்டிகளின் முடிவில் இந்திய அணி 2-1 என்ற கணக்கில் தொடரில் முன்னிலை வகிக்கிறது. இதனையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 4-வது போட்டி 17-ம் தேதி நடைபெற உள்ளது.

இந்நிலையில் இந்த தொடரின் எஞ்சிய போட்டிகளில் இருந்து இந்திய முன்னணி ஆல் ரவுண்டரான அக்சர் படேல் விலகியுள்ளார். உடல் நலக்குறைவு காரணமாக அவர் விலகியுள்ளது பி.சி.சி.ஐ. அறிவித்துள்ளது. இவர் ஏற்கனவே உடல் நலக்குறைவு காரணமாக 3-வது போட்டியை தவறவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. இவருக்கு பதிலாக ஷபாஸ் அகமது அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

இந்திய அணி விவரம்: சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), சுப்மன் கில், அபிஷேக் சர்மா, திலக் வர்மா, ஹர்திக் பாண்ட்யா, ஷிவம் துபே, ஜிதேஷ் சர்மா, சஞ்சு சாம்சன், ஜஸ்பிரித் பும்ரா, வருண் சக்கரவர்த்தி, அர்ஷ்தீப் சிங், குல்தீப் யாதவ், ஹர்ஷித் ராணா, வாஷிங்டன் சுந்தர், ஷபாஸ் அகமது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com