டி20 உலகக் கோப்பை: இந்தியாவிடம் வீழ்ந்த போதும் சாதனை படைத்த ஜிம்பாப்வே

இந்தியாவிற்கு எதிரான நேற்றைய போட்டியில் ஜிம்பாப்வே இந்த சாதனையை படைத்தது.
டி20 உலகக் கோப்பை:  இந்தியாவிடம் வீழ்ந்த போதும் சாதனை படைத்த ஜிம்பாப்வே
Published on

சென்னை,

நடப்பு டி20 உலகக்கோப்பை தொடரில் ஜிம்பாப்வே அணி ஒரு சாதனையை படைத்துள்ளது. இந்தியாவிற்கு எதிரான நேற்றைய போட்டியில், பவர்பிளேயில் விக்கெட்டுகளை இழக்காமல் 44 ரன்களை எடுத்த அந்த அணி பவர்பிளேயில் அதிகமுறை விக்கெட் இழக்காத அணி (3) என்ற சாதனையை படைத்துள்ளது.

சென்னையில் நேற்று நடைபெற்ற இந்தியா - ஜிம்பாப்வே போட்டியில், முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி அதிரடியாக விளையாடி 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகளுக்கு 256 ரன்கள் குவித்தது. இதையடுத்து 257 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஜிம்பாப்வே அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழக்க 184 ரன்கள் எடுத்தது.

Also Read
புதிய சாதனை படைத்த அர்ஷ்தீப் சிங்
டி20 உலகக் கோப்பை:  இந்தியாவிடம் வீழ்ந்த போதும் சாதனை படைத்த ஜிம்பாப்வே

இதன் மூலம் இந்திய அணி, 72 ரன்கள் வித்தியாசத்தில் ஜிம்பாப்வே அணியை வீழ்த்தி, சூப்பர் 8 சுற்றின் தனது முதல் வெற்றியை பதிவு செய்து அசத்தியது. அடுத்து இந்திய அணி வெஸ்ட் இண்டீஸ் அணியை வருகிற 1-ம் தேதி கொல்கத்தாவில் சந்திக்கிறது.

X

Daily Thanthi
www.dailythanthi.com