“அந்த ஒரு கேட்ச்… போட்டி கைமாறியது” - இங்கிலாந்து கேப்டன் வேதனை

பீல்டிங் மற்றும் பந்துவீச்சில் ஏற்பட்ட தவறுகள்தான் வெற்றியை பறித்துவிட்டன என்று ஹாரி புரூக் கூறினார்.
“அந்த ஒரு கேட்ச்… போட்டி கைமாறியது” - இங்கிலாந்து கேப்டன் வேதனை
Published on

சென்னை,

டி20 உலகக் கோப்பை தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. நேற்று நடைபெற்ற 2வது அரையிறுதி போட்டியில் இங்கிலாந்தை வீழ்த்தி இந்திய அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 253 ரன்கள் எடுத்தது. இதையடுத்து 254 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணி, கடைசி வரை போராடியது. இருப்பினும் 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 246 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதனால் இந்திய அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

போட்டி முடிந்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய இங்கிலாந்து கேப்டன் ஹாரி புரூக், பீல்டிங் மற்றும் பந்துவீச்சில் ஏற்பட்ட தவறுகள்தான் வெற்றியை பறித்துவிட்டன என்று கூறினார். இருப்பினும் தனது அணி கடைசி வரை போராடியதாகவும் அவர் தெரிவித்தார்.

அவர் பேசுகையில், , “பிட்ச் புதிதாக இருந்தது. பந்து நன்றாக ஸ்விங் ஆகும் என்றும் ஸ்பின்னர்களுக்கு உதவி செய்யும் என்றும் நினைத்தோம். அதனால்தான் டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தோம். ஆனால் எங்கள் கணிப்பு தவறாகிவிட்டது. பந்து பேட்டிற்கு நன்றாக வந்தது,” என்றார்.

Also Read
பேட்டியில் கண்கலங்கிய சஞ்சு சாம்சனின் தந்தை - வைரலாகும் வீடியோ
“அந்த ஒரு கேட்ச்… போட்டி கைமாறியது” - இங்கிலாந்து கேப்டன் வேதனை

மேலும், “சஞ்சு சாம்சன் கொடுத்த எளிய கேட்சை நான் தவறவிட்டது ஒரு பெரிய தவறு. ‘கேட்ச்கள் போட்டியை வெல்ல வைக்கும்’ என்ற சொல் இருக்கிறது. துரதிருஷ்டவசமாக அதை நாங்கள் சரியாக செய்யவில்லை. இந்திய அணியில் உலகின் சிறந்த பேட்ஸ்மேன்கள் உள்ளனர். அவர்களுக்கு தவறான பந்து வீசினால் அது உடனே பவுண்டரியாக மாறிவிடும். அதற்கு என்ன செய்ய முடியும்? சில நேரங்களில் இப்படித்தான் நடக்கும்’ என்று கூறினார்.

இலக்கை துரத்தியது பற்றி பேசுகையில், “254 ரன்கள் என்ற பெரிய இலக்கை நோக்கி நாங்கள் கடைசி வரை போராடினோம். சில அணிகள் போட்டியின் நடுப்பகுதியிலேயே நம்பிக்கையை இழந்துவிடும். ஆனால் நாங்கள் அப்படிச் செய்யவில்லை. இந்த தொடரில் எங்கள் அணி விளையாடிய விதம் குறித்து நாங்கள் மிகவும் பெருமை கொள்கிறோம்,” என்றார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com