

மும்பை,
டி20 உலகக்கோப்பை தொடர் இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெற்று வந்த நிலையில், தற்போது இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. முதலாவது அரையிறுதி ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி நியூசிலாந்து அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. இந்த நிலையில், நேற்று நடைபெற்ற 2-வது அரையிறுதி ஆட்டத்தில் இந்தியா - இங்கிலாந்து அணிகள் விளையாடின.
இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சை தேர்வுசெய்துள்ளது அதன்படி, இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 253 ரன்கள் எடுத்தது.
சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட சஞ்சு சாம்சன், சிக்சர் அடிக்க ஆசைப்பட்டு, ஆட்டமிழந்தார். அவர் 42 பந்துகளில் 8 பவுண்டரி, 7 சிக்சருடன் 89 ரன்கள் எடுத்தார். இதையடுத்து 254 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து அணி பேட்டிங் செய்தது.
தொடக்கத்தில் இங்கிலாந்து அணியில் பில் சால்ட் 5 ரன்கள் , ஹாரி புரூக் 7 ரன்கள் , பட்லர் 25 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர்.
தொடர்ந்து ஜேக்கப் பெத்தேல் அதிரடியாக விளையாடி ரன்கள் குவித்தார். நிலைத்து ஆடிய பெத்தேல் சதமடித்து அசத்தினார். கடைசி வரை போராடிய அவர் 105 ரன்களில் (ரன் அவுட் ) ஆட்டமிழந்தார். இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு இங்கிலாந்து அணி 253 ரன்கள் எடுத்தது. இதனால் இந்திய அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
இந்நிலையில், டி20 உலகக் கோப்பை அரையிறுதி ஆட்டத்தில் இங்கிலாந்து சுழற்பந்து வீச்சாளர் ஆதில் ரஷித் வீசிய பந்துகளில் இந்திய அணி வீரர்கள் 4 சிக்சர்களைப் 4 சிக்சர்களைப் பறக்கவிட்டிருந்தனர்.
இதன்மூலம் சர்வதேச டி20 அரங்கில் 200க்கும் அதிகமான சிக்சர்களை விட்டுக் கொடுத்த முதல் பந்துவீச்சாளர் என்ற மோசமான சாதனையை ஆதில் ரஷித் படைத்துள்ளார்.