டி20 உலகக் கோப்பை: அயர்லாந்து அணியை எளிதில் வீழ்த்தி ஆஸ்திரேலியா வெற்றி

ஆஸ்திரேலிய அணி 67 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
டி20 உலகக் கோப்பை: அயர்லாந்து அணியை எளிதில் வீழ்த்தி ஆஸ்திரேலியா வெற்றி
Published on

கொழும்பு,

டி20 உலகக்கோப்பை தொடர் இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெற்று வருகிறது.

இதில் இன்று நடைபெற்ற 14வது ஆட்டத்தில் ஆஸ்திரேலியா - அயர்லாந்து அணிகள் மோதின .

இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. அதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் டிராவிஸ் ஹெட் பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் செய்தது.

சிறப்பாக விளையாடிய ஆஸ்திரேலியா அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 182 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் மார்க்ஸ் ஸ்டாய்னிஸ் 45 ரன்களும் , ரென்ஸாவ் , ஜோஷ் இங்கிலீஸ் தலா 37 ரன்களும் எடுத்தனர். தொடர்ந்து 183 ரன்கள் இலக்குடன் அயர்லாந்து அணி விளையாடியது.

இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. அதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் டிராவிஸ் ஹெட் பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் செய்தது.சிறப்பாக விளையாடிய ஆஸ்திரேலியா அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 182 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் மார்க்ஸ் ஸ்டாய்னிஸ் 45 ரன்களும் , ரென்ஸாவ் , ஜோஷ் இங்கிலீஸ் தலா 37 ரன்களும் எடுத்தனர். தொடர்ந்து 183 ரன்கள் இலக்குடன் அயர்லாந்து அணி விளையாடியது.

ஆஸ்திரேலிய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அயர்லாந்து அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது. அந்த அணியில் ஜார்ஜ் டாக்ரெல் 41 ரன்கள் எடுத்தார். இறுதியில் 16.5 ஓவர்களில் அயர்லாந்து அணி 115 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. ஆஸ்திரேலிய அணியில் சிறப்பாக பந்துவீசி ஆடம் ஜாம்பா , நாதன் எல்லிஸ் தலா 4 விக்கெட்டுகள் வீழ்த்தினர். இதனால் ஆஸ்திரேலிய அணி 67 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com