டி20 உலகக்கோப்பை; வங்காளதேச அணி அறிவிப்பு

வங்காளதேச அணிக்கு லிட்டன் தாஸ் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
டாக்கா,
10-வது டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி பிப்ரவரி 7-ந் தேதி முதல் மார்ச் 8-ந் தேதி வரை இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெறுகிறது. இந்த போட்டியில் பங்கேற்கும் 20 அணிகள் 4 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. இந்த தொடருக்கான அணியை ஒவ்வொரு நாடுகளும் அறிவித்து வருகின்றன.
இந்த நிலையில், டி20 உலகக் கோப்பை தொடருக்கான வங்காளதேச அணி அறிவிக்கப்பட்டுள்ளது. வங்காளதேச அணிக்கு லிட்டன் தாஸ் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
வங்காளதேச அணி :
லிட்டன் தாஸ் (கேப்டன்), தன்சித் ஹசன், பர்வேஸ் ஹொசைன் , சைப் ஹசன், தவ்ஹித் ஹிரிடோய், ஷமிம் ஹொசைன், குவாஸி நூருல் ஹசன் , ஷக் மஹேதி ஹசன், ரிஷாத் ஹொசைன், நசும் அகமது, முஸ்தாபிசுர் ரஹ்மான், டன்சிம் ஹசன் , தஸ்கின் அகமது, ஷாபிப் உதின் , ஷோபுல் இஸ்லாம்.
Related Tags :
Next Story






