டி20 உலகக் கோப்பை: நியூசிலாந்துக்கு எதிராக கனடா பேட்டிங் தேர்வு

டாஸ் வென்ற கனடா அணியின் கேப்டன் தில்பிரீத் பஜ்வா பேட்டிங்கை தேர்வு செய்தார்
டி20 உலகக் கோப்பை: நியூசிலாந்துக்கு எதிராக கனடா பேட்டிங் தேர்வு
Published on

சென்னை,

10வது டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியா இலங்கையில் நடைபெற்று வருகிறது. இதில் 20 அணிகள் பங்கேற்றுள்ளன. இந்த அணிகள் 4 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. லீக் சுற்றின் முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் டாப் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் சூப்பர் 8 சுற்றுக்கு தகுதிபெறும்.இன்று இந்த தொடரில் 3 ஆட்டங்கள் நடைபெற உள்ளது.

இன்று சென்னையில் நடைபெறும் 31வது ஆட்டத்தில் கனடா- நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன. இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. அதில் டாஸ் வென்ற கனடா அணியின் கேப்டன் தில்பிரீத் பஜ்வா பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி கனடா அணி முதலில் பேட்டிங் செய்கிறது. காயம் காரணமாக சான்ட்னர் விலகிய நிலையில் இந்த போட்டியில் நியூசிலாந்து அணியின் கேப்டனாக டேரில் மிட்சேல் செயல்படுகிறார் .

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com