டி20 உலகக் கோப்பை: அணியில் மாற்றம் செய்துகொள்ளலாம் - ஐசிசி

இந்த தொடருக்கான அணியை ஒவ்வொரு நாடுகளும் அறிவித்து வருகின்றன.
டி20 உலகக் கோப்பை: அணியில் மாற்றம் செய்துகொள்ளலாம் - ஐசிசி
Published on

மும்பை,

10-வது டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி அடுத்த ஆண்டு பிப்ரவரி 7-ந் தேதி முதல் மார்ச் 8-ந் தேதி வரை இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெறுகிறது. இந்த போட்டியில் பங்கேற்கும் 20 அணிகள் 4 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. இந்த தொடருக்கான அணியை ஒவ்வொரு நாடுகளும் அறிவித்து வருகின்றன.இதில் இந்தியா, இங்கிலாந்து, ஆப்கானிஸ்தான், ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் அறிவித்து விட்டனர். மற்ற நாடுகள் இன்னும் அறிவிக்கவில்லை.

இந்நிலையில் உலகக் கோப்பைக்கான அனைத்து அணிகளும் ஏற்கனவே அறிவித்துள்ள அணியில் ஜனவரி 31-ம் தேதி வரை மாற்றங்களைச் செய்யலாம் என ஐசிசி அறிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com