டி20 உலகக் கோப்பை கிரிக்கெட்: இந்தியா- நெதர்லாந்து இன்று மோதல்
ஆமதாபாத்,
20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில், 'ஏ' பிரிவில் இடம் பெற்றுள்ள நடப்பு சாம் பியனான இந்திய அணி முதல் 3 ஆட்டங்களில் அமெரிக்கா, நமிபியா, பாகிஸ்தான் அணி களை வரிசையாக பதம் பார்த்து கம்பீரமாக சூப்பர்8 சுற்றுக்குள் நுழைந்தது.
இந்த நிலையில் இந்திய அணி தனது கடைசி லீக்கில் இன்று நெதர்லாந்தை எதிர்கொள்கிறது. இந்த ஆட்டம் ஆமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடக் கிறது. மிகுந்த எதிர்பார்ப்புக்கு இடையே நடந்த முந்தைய ஆட்டத்தில் இந்திய அணி, பாகிஸ் தானை 61 ரன் வித்தியாசத்தில் ஊதித்தள்ளியது. இன்றைய ஆட்டத்தின் முடிவு எந்த தாக்கத்தையும் ஏற்படுத் தாது என்பதால் அணியில் சில மாற்றங்கள் இருக்கும். வேகப்பந்து வீச்சாளர் பும்ரா, ஹர்திக் பாண்ட்யாவுக்கு ஓய்வு அளிக்கப்படலாம். அதே சமயம் இதுவரை ஆடிய 2 ஆட்டங்களிலும் டக்-அவுட் ஆகியுள்ள அபிஷேக் ஷர்மா சூப்பர்8 சுற்றுக்கு முன்பாக பார்முக்கு திரும்ப இந்த ஆட்டத்தை பயன்படுத்திக் கொள்ள முயற்சிப்பார்.
அடுத்த சுற்று வாய்ப்பை இழந்து விட்ட ஸ்காட் எட்வர்ட்ஸ் தலைமையிலான நெதர்லாந்து அணி, பாகிஸ்தான் மற்றும் அமெரிக்காவிடம் தோல்வி அடைந்தது. நமிபியாவுக்கு எதிராக 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. நெதர்லாந்து அணியில் சில தரமான ஆல்-ரவுண்டர்கள் இருப்பதால் கடும் சவால் அளிப்பார்கள். பாகிஸ்தான் கூட கடைசி ஓவரில் தான் அந்த அணியை வீழ்த்தியது. அதனால் நமது வீரர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் ஆடவேண்டியது அவசியமாகும்.இவ்விரு அணிகள் சர்வதேச கிரிக்கெட்டில் (ஒரு நாள் மற்றும் 20 ஓவர் சேர்த்து) இதுவரை 4 முறை மோதியுள்ளன. அனைத்திலும் இந்தியாவே வெற்றி கண்டிருக்கிறது.
போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-
இந்தியா: அபிஷேக் ஷர்மா, இஷான் கிஷன், திலக் வர்மா, சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), ஹர்திக் பாண்ட்யா அல்லது வாஷிங்டன் சுந்தர், அக்ஷர் பட்டேல், ஷிவம் துபே, ரிங்கு சிங். அர்ஷ்தீப்சிங், பும்ரா அல்லது முகமது சிராஜ், வருண் சக்ரவர்த்தி.
நெதர்லாந்து: மைக்கேல் லெவிட், மேக்ஸ் ஓ டாட், பாஸ் டீ லீட், காலின் அக்கர்மேன். ஸ்காட் எட்வர்ட்ஸ் (கேப்டன்), ஜாச் லயன் கேச்செட், லோகன் வான் பீக், ஆர்யன் தத், வான்டெர் மெர்வ், கைல் கிளென் அல்லது பிரெட் கிளாசென், பால் வான் மீக்கரென்.
இரவு 7 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கின்றன.

