டி20 உலகக்கோப்பை: துபே உள்ளே..ஹர்திக் வெளியே...இந்திய அணியை தேர்வு செய்த ஹர்பஜன்

டி20 உலகக்கோப்பை தொடருக்காக ஹர்பஜன் சிங் தேர்வு செய்துள்ள இந்திய அணியில் ஹர்திக் இடம்பெறவில்லை.
டி20 உலகக்கோப்பை: துபே உள்ளே..ஹர்திக் வெளியே...இந்திய அணியை தேர்வு செய்த ஹர்பஜன்
Published on

மும்பை,

9-வது 20 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் ஜூன் 1-ந் தேதி முதல் 29-ந் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த தொடரில் பங்கேற்க உள்ள ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி விரைவில் அறிவிக்கப்பட உள்ளது.

இந்த தொடருக்கான இந்திய அணியில் நடப்பு ஐ.பி.எல். சீசனில் சிறப்பாக செயல்படும் வீரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் எதிர்வரும் டி20 உலகக்கோப்பை தொடரை முன்னிட்டு அந்த தொடருக்கான இந்திய அணியில் இடம் பெற வேண்டிய வீரர்கள் குறித்து பல இந்திய முன்னாள் வீரர்கள் தங்களது கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் இந்திய முன்னாள் வீரரான ஹர்பஜன் சிங், தான் தேர்வு செய்துள்ள 15 வீரர்கள் கொண்ட இந்திய அணியை அறிவித்துள்ளார்.

அதில் ஹர்திக் பாண்ட்யாவை தேர்வு செய்யாத அவர், நடப்பு ஐ.பி.எல். சீசனில் அதிரடியாக விளையாடி வரும் ஷிவம் துபேவை அணியில் சேர்த்துள்ளார். மேலும் பந்து வீச்சாளர்களில் முகமது சிராஜை தேர்வு செய்யாத அவர், மயங்க் யாதவை தேர்வு செய்துள்ளார்.

ஹர்பஜன் சிங் அணி விவரம் பின்வருமாறு:-

ரோகித் சர்மா (கேப்டன்), ஜெய்ஸ்வால், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ரிஷப் பண்ட், ரிங்கு சிங், சஞ்சு சாம்சன், ஷிவம் துபே, ஜடேஜா, சாஹல், குல்தீப் யாதவ், பும்ரா, ஆவேஷ் கான், அர்ஷ்தீப் சிங் மற்றும் மயங்க் யாதவ்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com