டி20 உலகக் கோப்பை: ஸ்காட்லாந்து அணியை வீழ்த்தி இங்கிலாந்து வெற்றி

இங்கிலாந்து அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
டி20 உலகக் கோப்பை: ஸ்காட்லாந்து அணியை வீழ்த்தி இங்கிலாந்து வெற்றி
Published on

கொல்கத்தா,

10-வது டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் திருவிழா இந்தியா மற்றும் இலங்கையில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 20 அணிகள் 4 பிரிவாக பிரிக்கப்பட்டு மோதுகின்றன. லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் டாப்-2 இடங்களை பிடிக்கும் அணிகள் சூப்பர்8 சுற்றுக்கு தகுதி பெறும்.

தற்போது லீக் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இன்று நடைபெற்ற 23வது லீக் ஆட்டத்தில் இங்கிலாந்து - ஸ்காட்லாந்து அணிகள் மோதின.

இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. அதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் ஹாரி புரூக் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி ஸ்காட்லாந்து அணி முதலில் பேட்டிங் செய்தது.

20 ஓவர்கள் முடிவில் ஸ்காட்லாந்து அணி 19.4 ஓவர்கள் முடிவில் 152 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அந்த அணியில் ரிச்சி பெர்ரிங்க்டன் 49 ரன்கள் , மைக்கேல் ஜோன்ஸ் 33 ரன்களும் எடுத்தனர். இங்கிலாந்து அணியில் ஆதில் ரஷீத் 3 விக்கெட் வீழ்த்தினார். தொடர்ந்து 153 ரன்கள் இலக்குடன் இங்கிலாந்து அணி விளையாடியது.

தொடக்கத்தில் பில் சால்ட் 2 ரன்கள் , ஜோஸ் பட்லர் 3 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர். பின்னர் ஜேக்கப் பெத்தேல், டாம் பாண்டன் இருவரும் இணைந்து அதிரடி காட்டினர். ஜேக்கப் பெத்தேல் 32 ரன்கள் எடுத்து ஆட்ட்டமிழந்தார்.

தொடர்ந்து சிறப்பாக விளையாடிய டாம் பாண்டன் அரைசதமடித்தார் . அவருடன் சாம் கரண் அதிரடியாக விளையாடினார். இதனால் 18.2 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 155 ரன்கள் எடுத்து இங்கிலாந்து அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com