

கொல்கத்தா,
இந்தியா மற்றும் இலங்கை இணைந்து நடத்தும் 10-வது ஐ.சி.சி. ஆடவர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அந்தவகையில், கொல்கத்தாவில் பிற்பகல் 3 மணிக்கு தொடங்கிய போட்டியில் இங்கிலாந்து மற்றும் இத்தாலி அணிகள் விளையாடி வருகின்றன. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங்கை தேர்வுசெய்தது. அதன்படி அந்த அணி முதலில் பேட்டிங் செய்தது.
அனுபவ பேட்ஸ்மேன் ஜாஸ் பட்லர் 3 ரன்னில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். மற்ற பேட்ஸ்மேன்கள் அனைவரும் தங்கள் பங்குக்கு ரன்களை சேர்த்தனர். கடைசி கட்டத்தில் அதிரடியாக விளையாடிய வில் ஜேக்ஸ், 20 பந்துகளில் 47 ரன்கள் எடுத்தார். இறுதியில் இங்கிலாந்து அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 202 ரன்கள் எடுத்துள்ளது. இதையடுத்து 203 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இத்தாலி அணி பேட்டிங் செய்து வருகிறது.