டி20 உலகக் கோப்பை: சிறப்பு டூடுல் வெளியிட்ட கூகுள்

டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியை சிறப்பிக்கும் வகையில் சிறப்பு டூடுல் ஒன்றை வெளியிட்டுள்ளது.
டி20 உலகக் கோப்பை: சிறப்பு டூடுல் வெளியிட்ட கூகுள்
Published on

சென்னை,

டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இன்று தொடங்கியுள்ளது. போட்டிகள் இந்தியாவில் அகமதாபாத், மும்பை, சென்னை உள்ளிட்ட 5 நகரங்களிலும், இலங்கையின் கொழும்பு, பல்லேகல்லேயிலும் நடைபெற உள்ளன.

இந்நிலையில், டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியை சிறப்பிக்கும் வகையில் கூகுள் தனது முகப்பு பக்கத்தில் சிறப்பு டூடுல் ஒன்றை வெளியிட்டுள்ளது.

இணைய தேடு பொறியில் முதன்மை நிறுவனமான கூகுள் சுதந்திர தினம், குடியரசு தினம் போன்ற முக்கிய நாட்கள், பிரபலங்களின் பிறந்த நாட்கள் மற்றும் பண்டிகை காலங்களில் அதன் தேடு பொறியில் புதிய டூடுலை மாற்றியமைக்கும். தனது டுடூல் அமைப்பை அந்த நாளின் சிறப்புக்கு ஏற்றார் போல் மாற்றி அமைத்து வருவது குறிப்பிடத்தக்கது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com