டி20 உலகக் கோப்பை: இந்தியா - பாகிஸ்தான் இன்று மோதல்

இந்த ஆட்டம் மீதான எதிர்பார்ப்பு வழக்கம் போல் எகிறி இருக்கிறது.
டி20 உலகக் கோப்பை: இந்தியா - பாகிஸ்தான் இன்று மோதல்
Published on

கொழும்பு,

10வது டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியா, இலங்கையில் நடைபெற்று வருகிறது. இதில் இலங்கை தலைநகர் கொழும்புவில் இன்று நடைபெறும் 27வது லீக் ஆட்டத்தில் இந்தியா - பாகிஸ்தான் மோத உள்ளன. இந்த ஆட்டம் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இரு நாடுகளும் ஐ.சி.சி. மற்றும் ஆசிய போட்டிகளில் மட்டுமே இரு அணிகளும் நேருக்கு நேர் மோதுகின்றன. இதனால் இந்த ஆட்டம் மீதான எதிர்பார்ப்பு வழக்கம் போல் எகிறி இருக்கிறது. அத்துடன் இந்திய மண்ணில் விளையாட மறுத்த வங்காளதேசம் நடப்பு உல கக் கோப்பையில் இருந்து நீக்கப்பட்டதால் அவர்களுக்கு ஆதரவாக இந்தியாவுக்கு எதி ரான லீக் ஆட்டத்தை புறக்கணிப்பதாக அறி வித்த பாகிஸ்தான் அரசும், அந்த நாட்டு கிரிக் கெட் வாரியமும் நீண்ட இழுபறிக்கு பிறகு தங் கள் முடிவை திரும்ப பெற்று இந்த ஆட்டத்தில் களம் இறங்க சம்மதம் தெரிவித்தன. அந்த வகையிலும் இந்த ஆட்டம் ரசிகர்கள் மத்தியில் அதிக கவனத்தை ஈர்த்துள்ளது.

அடுத்த சுற்று வாய்ப்பை உறுதி செய்ய இரு அணிகளும் தங்களது முழுபலத்தையும் வெளிப்படுத்தும் என்பதால் ஆட்டத்தில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது. இரவு 7 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கின்றன.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com