டி20 உலகக்கோப்பை: அவர் அசத்தினால் மட்டுமே இந்தியா வெல்லும்..அதேபோல ஆஸ்திரேலியாவுக்கும்..- டிம் பெயின்

டி20 உலகக்கோப்பை தொடர் அடுத்த மாதம் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடைபெற உள்ளது.
டி20 உலகக்கோப்பை: அவர் அசத்தினால் மட்டுமே இந்தியா வெல்லும்..அதேபோல ஆஸ்திரேலியாவுக்கும்..- டிம் பெயின்
Published on

சிட்னி,

20 அணிகள் கலந்து கொள்ளும் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் பேட்டி ஜூன் 1-ந் தேதி (இந்திய நேரப்படி ஜூன் 2ம் தேதி) முதல் 29-ந் தேதி வரை வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடக்க உள்ளது. இந்த தொடரில் இந்திய அணி ரோகித் சர்மா தலைமையில் களம் இறங்க உள்ளது.

கடந்த வருடம் ரோகித் சர்மா தலைமையில் நட்சத்திர வீரர்களுடன் களமிறங்கிய இந்திய அணி, டெஸ்ட் சாம்பியன்ஷிப் மற்றும் 50 ஓவர் உலகக்கோப்பை பைனல்களில் தோல்வியை சந்தித்தது. இருப்பினும் இம்முறை ரோகித் சர்மா தலைமையில் விராட் கோலி, பும்ரா, சூர்யகுமார் யாதவ், ஜெய்ஸ்வால், ஷிவம் துபே போன்ற அனுபவமும் இளமையும் கலந்த வீரர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். எனவே இம்முறை டி20 உலகக் கோப்பையை வெல்ல இந்திய அணி முழுமூச்சுடன் போராட உள்ளது.

இந்நிலையில் விராட் கோலி அசத்தினால் மட்டுமே இந்தியா டி20 உலகக்கோப்பையை வெல்லும் என்று டிம் பெயின் கூறியுள்ளார். அதேபோல மேக்ஸ்வெல் தாக்கத்தை ஏற்படுத்தத் தவறினால் ஆஸ்திரேலியாவும் வெற்றி பெறாது என்று அவர் வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.

இது குறித்து சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு:- "விராட் கோலி ரன் குவிப்பில் அசத்தாத வரை இந்தியா உலகக்கோப்பையை வெல்வதை நான் பார்க்கப் போவதில்லை. அதேபோல மேக்ஸ்வெல் பார்ம் ஆஸ்திரேலியாவுக்கு முக்கியமானது. அவர் முன்பு போல் தற்போது நல்ல பார்மில் இல்லை என்பது எனக்குத் தெரியும். இருப்பினும் அவர் எதாவது செய்யாத வரை ஆஸ்திரேலியா உலகக்கோப்பை வெல்வதையும் நான் பார்க்கப் போவதில்லை" என்று கூறினார். 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com