டி20 உலகக் கோப்பை: வெளிநாட்டு அணிகளுக்காக விளையாடும் இந்திய வம்சாவளி வீரர்கள்

தற்போது பயிற்சி ஆட்டங்கள் நடந்து வருகின்றன.
டி20 உலகக் கோப்பை: வெளிநாட்டு அணிகளுக்காக விளையாடும் இந்திய வம்சாவளி வீரர்கள்
Published on

கொழும்பு,

10-வது டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி வருகிற 7-ந்தேதி முதல் அடுத்த மாதம் 8-ந்தேதி வரை இந்தியா மற்றும் இலங்கையின் பல்வேறு நகரங்களில் நடக்கிறது. இதையொட்டி தற்போது பயிற்சி ஆட்டங்கள் நடந்து வருகின்றன.

இந்த உலகக் கோப்பையில் இந்திய அணி தனது தொடக்க ஆட்டத்தில் அமெரிக்காவை வருகிற 7-ந்தேதி மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் சந்திக்கிறது.

அமெரிக்க அணிக்கு தேர்வான 15 வீரர்களில் 9 பேர் இந்திய வம்சாவளியினர்.கேப்டன் மோனங்க் பட்டேல் குஜராத் மாநிலம் ஆனந்த் நகரில் பிறந்தவர்.

இத்தாலி அணி, உலகக் கோப்பையில் அறிமுக அணியாக அடியெடுத்து வைக்கிறது. இதில் அந்த அணிக்காக ஆடும் 32 வயதான வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரீத் சிங் கவனத்தை ஈர்க்கிறார். இவர் பஞ்சாப் மாநிலம் பாக்வாராவில் பிறந்தவர்.

இதே போல் ஓமன் மற்றும் ஐக்கிய அரபு அமீரக அணிகளில் தலா 7 பேர் வம்சாவளியை சேர்ந்தவர்கள்இருக்கிறார்கள்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com