டி20 உலகக்கோப்பை: அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து இந்திய அணி திணறல்

இந்திய அணி 7.2 ஓவர்களில் 42 ரன்னுக்கு 4 விக்கெட்டுகளை இழந்துள்ளது.
டி20 உலகக்கோப்பை: அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து இந்திய அணி திணறல்
Published on

அகமதாபாத்,

டி20 உலகக்கோப்பையில் சூப்பர் 8 சுற்று ஆட்டங்கள் நடைபெற்று வருகின்றன. அகமதாபாத் மைதானத்தில் நடைபெற்று வரும் ஆட்டத்தில் இந்தியா - தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதி வருகின்றன. இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. அதன்படி அந்த அணி முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்க அணிக்கு தொடக்கமே அதிர்ச்சி காத்திருந்தது.

தொடக்க ஆட்டக்காரர்களான டி காக் (4), கேப்டன் மார்க்ரன் (6), ரிக்கல்டன் (7) ஆகியோர் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இதையடுத்து மில்லர் - பிரெவிஸ் இணைந்து அணியை சரிவில் இருந்து மீட்டனர். இருவரும் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தியதால், அணியின் ஸ்கோர் வேகமாக உயர்ந்தது.

பிரெவிஸ் 45 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். இந்த ஜோடி 4வது விக்கெட்டுக்கு 97 ரன்கள் சேர்த்தது. அரைசதம் கடந்த மில்லர், 63 ரன்களில் ஆட்டமிழந்தார். இறுதி தென் ஆப்பிரிக்க அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 187 ரன்கள் எடுத்துள்ளது. இதையடுத்து 188 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி பேட்டிங் செய்து வருகிறது.

தொடக்க ஆட்டக்காரர்களான இருவரும் ஏமாற்றமளித்தனர். இஷான் கிஷன் ரன் ஏதும் எடுக்காமலும், அபிஷேக் சர்மா 14 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். திலக் வர்மா ஒரு ரன்னிலும், வாஷிங்டன் சுந்தர் 11 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். இதனால் இந்திய அணி தற்போது வரைஇந்திய அணி 9 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 51 ரன்கள் எடுத்து தடுமாறி வருகிறது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com