

டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதி ஆட்டம் அகமதாபாத்தில் நேற்று நடைபெற்றது. இதில் இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதின.
டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இதன்படி, முதலில் பேட்டிங்கை தொடங்கிய இந்திய அணி சரவெடியாக வெடித்து 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 255 ரன்கள் எடுத்தது. இதன் மூலம் நியூசிலாந்து அணிக்கு 256 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.
தொடர்ந்து 256 ரன்கள் இலக்குடன் நியூசிலாந்து களமிறங்கியது.19 ஓவர்கள் முடிவில் நியூசிலாந்து அணி 159 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது. இதனால் 96 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றது. 3வது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்ற முதல் அணியாக இந்திய அணி சாதனை படைத்துள்ளது.
இந்த நிலையில், "இந்திய அணிக்கு நடிகரும், அரசியல் கட்சி தலைவருமான கமல்ஹாசன் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது,
எங்கள் ஆண்கள் அணி, தொடர்ச்சியாக ஐ.சி.சி ஆண்கள் டி20 உலகக் கோப்பை சாம்பியன்கள்! ஆண்கள் ஐ.சி.சி கிரிக்கெட் உலகக் கோப்பை இரண்டாம் இடம். பெண்கள் ஐ.சி.சி மகளிர் கிரிக்கெட் உலகக் கோப்பை சாம்பியன்கள்.
ரஞ்சி டிராபி முதல் ஐ.பி.எல் வரை இந்தியாவின் ஆழமான உள்நாட்டு சுற்றுச்சூழல் அமைப்புக்கு ஒரு சான்று.
ஒவ்வொரு விளையாட்டுக்கும் இதுபோன்ற உள்நாட்டு சுற்றுச்சூழல் அமைப்பு இருந்தால் இந்தியா என்ன சாதிக்க முடியும் என்பதை கற்பனை செய்து பாருங்கள். இந்திய இளைஞர்களின் ஆற்றல் வரம்பற்றது.
பள்ளத்தாக்குகளிலிருந்து பிரமாண்டமான மைதானங்கள் வரை, குழந்தை பருவ கனவுகளிலிருந்து உலக சாம்பியன்கள் வரை - இந்தியா உயர்கிறது."
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.