டி20 உலகக்கோப்பை: நெதர்லாந்துக்கு 157 ரன்கள் இலக்கு நிர்ணயித்த நமீபியா

இன்றைய ஆட்டத்தில் நெதர்லாந்து - நமீபியா அணிகள் விளையாடி வருகின்றன.
டி20 உலகக்கோப்பை: நெதர்லாந்துக்கு 157 ரன்கள் இலக்கு நிர்ணயித்த நமீபியா
Published on

டெல்லி,

டி20 உலகக்கோப்பை தொடர் இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெறும் 10-வது லீக் ஆட்டத்தில் நெதர்லாந்து - நமீபியா அணிகள் விளையாடி வருகின்றன. இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற நெதர்லாந்து அணி பந்துவீச்சை தேர்வுசெய்தது. அதன்படி நமீபியா அணி முதலில் பேட்டிங் செய்தது.

அந்த அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 157 ரன்கள் எடுத்துள்ளது. அதிகபட்சமாக லாப்டி ஈட்டன் 42 ரன்கள் எடுத்தார். நெதர்லாந்து தரப்பில் வான் பீக், டீ லீட் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். இதையடுத்து 157 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நெதர்லாந்து அணி பேட்டிங் செய்து வருகிறது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com