டி20 உலகக் கோப்பை: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு 134 ரன்கள் இலக்கு நிர்ணயித்த நேபாளம்

திபேந்திர சிங் மட்டும் அதிரடியாகி விளையாடி ரன்கள் குவித்தார்
டி20 உலகக் கோப்பை: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு 134 ரன்கள் இலக்கு நிர்ணயித்த நேபாளம்
Published on

மும்பை,

10வது டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியா, இலங்கையில் நடைபெற்று வருகிறது. இதில் மும்பையில் இன்று நடைபெறும் 25வது லீக் ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் - நேபாளம் அணிகள் மோதுகின்றன.

இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. அதில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணியின் கேப்டன் ஷாய் ஹோப் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி நேபாளம் அணி முதலில் பேட்டிங் செய்தது.

தொடக்கம் முதல் வெஸ்ட் இண்டீஸ் அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமால் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது.அந்த அணியில் திபேந்திர சிங் மட்டும் அதிரடியாக விளையாடி ரன்கள் குவித்தார். அவர் அரைசதமடித்தார்.

மற்ற வீரர்கள் ஒற்றை இலக்க ரன்களில் ஆட்டமிழந்தனர். இதனால் நேபாளம் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 133 ரன்கள் எடுத்தது. வெஸ்ட் இண்டீஸ் அணியில் ஜேசன் ஹோல்டர் 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com