

மும்பை,
10-வது டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் திருவிழா இந்தியா மற்றும் இலங்கையில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 20 அணிகள் 4 பிரிவாக பிரிக்கப்பட்டு மோதுகின்றன. லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் டாப்-2 இடங்களை பிடிக்கும் அணிகள் சூப்பர்8 சுற்றுக்கு தகுதி பெறும்.
தற்போது லீக் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இன்று நடைபெறும் 17வது ஆட்டத்தில் நேபாளம் - இத்தாலி அணிகள் மோதுகின்றன.
இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது.அதில் டாஸ் வென்ற இத்தாலி அணியின் கேப்டன் ஹாரி மேனின்டி பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி நேபாளம் அணி முதலில் பேட்டிங் செய்தது.
தொடக்கம் முதல் இத்தாலி அணியின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் நேபாளம் அணி தடுமாறியது. இதனால் நேபாளம் அணி 19.3 ஓவர்கள் முடிவில் 123 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அந்த அணியில் ஆரிப் ஷேய்க் 27 ரன்கள் எடுத்தார். இத்தாலி அணியில் கிரிஷான் 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
தொடர்ந்து 124 ரன்கள் இலக்குடன் இத்தாலி அணி விளையாடுகிறது .