20 ஓவர் உலக கோப்பை இறுதிப்போட்டி: வில்லியம்சன் அதிரடி: நியூசிலாந்து அணி 172 ரன்கள் குவிப்பு

20 ஓவர் உலக கோப்பை இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஆட்டத்தில் நியூசிலாந்து அணி 172 ரன்கள் குவித்துள்ளது.
20 ஓவர் உலக கோப்பை இறுதிப்போட்டி: வில்லியம்சன் அதிரடி: நியூசிலாந்து அணி 172 ரன்கள் குவிப்பு
Published on

துபாய்

7-வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் கடந்த மாதம் 17-ந்தேதி தொடங்கியது. 16 அணிகள் பங்கேற்ற இந்த கிரிக்கெட் திருவிழாவில் முதல் சுற்று மற்றும் சூப்பர்-12 சுற்று முடிவில் நியூசிலாந்தும், ஆஸ்திரேலியாவும் இறுதிப்போட்டிக்குள் நுழைந்தன.

இந்த நிலையில் கோப்பை யாருக்கு? என்பதை நிர்ணயிக்கும் இறுதிப்போட்டியில் நியூசிலாந்து- ஆஸ்திரேலியா அணிகள் துபாயில் இன்று மோதுகின்றன.

இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஆரோன் பிஞ்ச் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

அதன்படி நியூசிலாந்து அணி தொடக்க வீரர்களாக மார்ட்டின் கப்தில், டேரில் மிட்செல் களமிறங்கினர் .தொடக்கவீரர் டேரில் மிட்செல் 8 பந்துகளில்( 1 சிக்சருடன்) 11 ரன்களில் ஹேசில்வுட் பந்துவீச்சில் ஆட்டமிழந்து வெளியேறினார். அவரை தொடர்ந்து மார்ட்டின் கப்டில் 35 பந்துகளில் 28 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

இதையடுத்து வில்லியம்சன் அதிரடி காட்டத் தொடங்கினார் அதிரடியாகி விளையாடிய அவர் 32 பந்துகளில் அரைசதம் அடித்து அசத்தினார். 48 பந்துகளில் ( 10 பவுண்டரி 3 சிக்ஸர் ) 85 ரன்கள் குவித்து அவர் ஆட்டமிழந்தார்

இதனால் நியூசிலாந்து அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 172 ரன்கள் குவித்தது. இதையடுத்து ஆஸ்திரேலியா அணிக்கு 173 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. ஆஸ்திரேலியா சார்பில் அதிகபட்சமாக ஹேசில்வுட்.3 விக்கெட் வீழ்த்தினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com