20 ஓவர் உலகக் கோப்பை: நியூசிலாந்து அணியை எளிதில் வீழ்த்தியது தென் ஆப்பிரிக்கா

தென் ஆப்பிரிக்கா அணியில் மார்கோ ஜான்சன் 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
20 ஓவர் உலகக் கோப்பை:  நியூசிலாந்து அணியை எளிதில் வீழ்த்தியது தென் ஆப்பிரிக்கா
Published on

அகமதாபாத்.

10வது டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியா இலங்கையில் நடைபெற்று வருகிறது. இதில் 20 அணிகள் பங்கேற்றுள்ளன. இந்த அணிகள் 4 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. லீக் சுற்றின் முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் டாப் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் சூப்பர் 8 சுற்றுக்கு தகுதிபெறும்.

இந்நிலையில், டி20 உலகக்கோப்பை கிரிக்கெட்டில் இன்று நடைபெறும் 24வது லீக் ஆட்டத்தில் நியூசிலாந்து - தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதுகின்றன.

அகமதாபாத்தில் நடைபெறும் இந்த ஆட்டத்திற்கான டாஸ் சுண்டப்பட்டது. இதில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா பந்து வீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து, நியூசிலாந்து முதலில் பேட்டிங் செய்தது.

தொடக்கத்தில் டிம் சீபாராட் 13 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். பின்னர் பின் ஆலன் 31 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். ரச்சின் ரவீந்திரா 13 ரன்கள் , கிளென் பிலிப்ஸ் 1 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். பின்னர் மார்க் சேப்மேன் , டேரில் மிட்சேல் அதிரடியாக விளையாடினர்.

மார்க் சேப்மேன் 48 ரன்களும் , டேரில் மிட்சேல் 32 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் நியூசிலாந்து அணி 7 விக்கெட் இழப்பிற்கு 175 ரன்கள் எடுத்தது. தென் ஆப்பிரிக்கா அணியில் மார்கோ ஜான்சன் 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

176 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பேட்டிங்கை தொடங்கிய தென் ஆப்பிரிக்க அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. கேப்டன் மார்க்கரம் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 17.1 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 178 ரன்களை எடுத்த தென் ஆப்பிரிக்க அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதிகபட்சமாக மார்க்கரம் 86 ரன்கள் எடுத்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com