டி20 உலகக் கோப்பை: நிசாங்கா சாதனை

.இலங்கை 18 ஓவரில் 2 விக்கெட் இழப்பிற்கு 184 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.
டி20 உலகக் கோப்பை:  நிசாங்கா சாதனை
Published on

பல்லேகல்லே,

டி20 உலகக்கோப்பை தொடர் இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெற்று வருகிறது. கொழும்புவில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் இலங்ஐ - ஆஸ்திரேலியா அணிகள் விளையாடி வருகின்றன. இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற இலங்கை அணி பந்துவீச்சை தேர்வுசெய்தது. அதன்படி ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் செய்தது.மிட்செல் மார்ஷ் (54), டிராவிஸ் ஹெட் (56) ஆகியோரின் அரைசதத்தால் ஆஸ்திரேலியா 20 ஓவரில் 9 விக்கெட் இழப்பிற்கு 181 ரன்கள் சேர்த்தது.

182 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் இலங்கை களம் இறங்கியது. நிசாங்கா 32 பந்தில் அரைசதமும், குசால் மெண்டிஸ் 35 பந்தில் அரைசதமும் அடித்தனர்.குசால் மெண்டிஸ் 51 ரன்னில் ஆட்டமிழந்தார். நிசாங்கா 100 ரன்களுடனும், ரத்னயகே 28 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.இலங்கை 18 ஓவரில் 2 விக்கெட் இழப்பிற்கு 184 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.

இந்த நிலையில் சதமடித்த நிசாங்கா புதிய சாதனை படைத்துள்ளார். இலங்கை வீரர் பதும் நிசாங்கா டி20 உலகக் கோப்பை கிரிக்கெட்டில் சதமடித்த 2-வது இலங்கை வீரர் என்ற சிறப்பை பெற்றார்.

இதற்கு முன்பு 2010-ம் ஆண்டு உலகக் கோப்பை யில் இலங்கையின் மஹேலா ஜெயவர்த்தனே ஜிம்பாப்வேக்கு எதிராக 100 ரன் எடுத்திருந்தார். மேலும் டி20 உலகக் கோப்பையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சதம் கண்ட முதல் வீரர் என்ற சாதனைக்கும் நிசாங்கா சொந்தக்காரர் ஆனார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com