

புதுடெல்லி,
10-வது 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் திருவிழா இந்தியா மற்றும் இலங்கையில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 20 அணிகள் 4 பிரிவாக பிரிக்கப்பட்டு மோதுகின்றன. லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் டாப்-2 இடங்களை பிடிக்கும் அணிகள் சூப்பர்8 சுற்றுக்கு தகுதி பெறும்.
தற்போது லீக் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இன்று நடைபெறும் லீக் ஆட்டத்தில் பி பிரிவில் அங்கம் வகிக்கும் இலங்கை - ஓமன் அணிகள் மோதுகின்றன. பல்லெகல்லேவில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் டாஸ் வென்ற ஓமன் அணி பந்துவீச்சை தேர்வுசெய்துள்ளது. அதன்படி இலங்கை அணி முதலில் பேட்டிங் செய்ய உள்ளது.