டி20 உலகக் கோப்பை: பாகிஸ்தான் அணி அறிவிப்பு

பாத்திமா சனா தலைமையிலான 15 பேர் கொண்ட பாகிஸ்தான் அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

டி20 உலகக் கோப்பை: பாகிஸ்தான் அணி அறிவிப்பு
Published on

இஸ்லாமாபாத்,

10-வது மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி இங்கி லாந்து மற்றும் வேல்சில் வருகிற ஜூன் 12-ந் தேதி முதல் ஜூலை 5-ந் தேதி வரை நடக்கிறது. இந்த போட்டிக்கான பாகிஸ்தான் அணி அறிவிக்கப்பட்டது. பாத்திமா சனா தலைமையிலான 15 பேர் கொண்ட பாகிஸ்தான் அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தான் அணி:

பாத்திமா சனா (கேப்டன்), குல் பெரோசா, ஆயிஷா ஜாபர், இராம் ஜாவேத், ஈமான் பாத்திமா, ஆலியா ரியாஸ், நடாலியா பர்வேஸ், சாயிரா ஜபீன், முனீபா அலி, துபா ஹாசன், ரமீன் ஷமீம், சாடியா இக்பால், நஷ்ரா சந்து, டயானா பெய்க், தஸ்மியா ரூபாப்.

X

Daily Thanthi
www.dailythanthi.com