டி20 உலகக் கோப்பை: தொடர் நாயகன் விருது வென்ற சஞ்சு சாம்சன்

இந்திய அணி வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றது.
டி20 உலகக் கோப்பை: தொடர் நாயகன் விருது வென்ற சஞ்சு சாம்சன்
Published on

அகமதாபாத்,

டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதி ஆட்டம் அகமதாபாத்தில் நேற்று நடைபெற்றது. இதில் இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதின.

டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இதன்படி, முதலில் பேட்டிங்கை தொடங்கிய இந்திய அணி சரவெடியாக வெடித்தது. இந்திய அணியின் துவக்க வீரர்களான சஞ்சு சம்சன் ( 89 ரன்கள்), அபிஷேக் சர்மா (52 ரன்கள்), இஷான் கிஷான் (54) என அதிரடி காட்டினர். சிக்சர் மழையாக இந்திய அணி பொழிந்தது. இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 255 ரன்கள் எடுத்துள்ளது. இதன் மூலம் நியூசிலாந்து அணிக்கு 256 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

தொடர்ந்து 257 ரன்கள் இலக்குடன் நியூசிலாந்து களமிறங்கியது.19 ஓவர்கள் முடிவில் நியூசிலாந்து அணி 159 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது. இதனால் 96ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றது. இதனால் 3வது முறையாக இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றது.

இந்த நிலையில், சிறப்பாக விளையாடிய சஞ்சு சாம்சனுக்கு தொடர்நாயகன் விருது வழங்கப்பட்டது.

இந்த தொடரில் 5 போட்டிகளில் விளையாடிய சஞ்சு சாம்சன் 321ரன்கள் எடுத்து இந்திய அணியின் வெற்றிக்கு முக்கிய பங்கு வகித்தார். இதனால் அவருக்கு தொடர்நாயகன் விருது வழங்கப்பட்டது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com