டி20 உலகக்கோப்பை: ஸ்காட்லாந்து சிறப்பான பேட்டிங்: இத்தாலிக்கு 208 ரன்கள் இலக்கு

கொல்கத்தாவில் நடைபெறும் 7-வது லீக் ஆட்டத்தில் ஸ்காட்லாந்து - இத்தாலி அணிகள் விளையாடி வருகின்றன.
டி20 உலகக்கோப்பை: ஸ்காட்லாந்து சிறப்பான பேட்டிங்: இத்தாலிக்கு 208 ரன்கள் இலக்கு
Published on

சென்னை,

20 அணிகள் பங்கேற்கும் டி20 உலகக்கோப்பை தொடர், இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெற்று வருகிறது. இதில் கொல்கத்தாவில் நடைபெற்று வரும் 7-வது லீக் ஆட்டத்தில் ஸ்காட்லாந்து - இத்தாலி அணிகள் விளையாடி வருகின்றன.

இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற இத்தாலி அணி, பந்துவீச்சை தேர்வுசெய்தது. அதன்படி ஸ்காட்லாந்து அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க ஆட்டக்காரர்களான முன்சி மற்றும் ஜோன்ஸ், அணிக்கு சிறப்பான தொடக்கம் கொடுத்தனர். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 126 ரன்கள் சேர்த்தது. முன்சி அரைசதம் கடந்து 83 ரன்னில் ஆட்டமிழந்தார். ஜோன்ஸ் 37 ரன்கள் எடுத்தார்.

கடைசி கட்டத்தில் பிரண்டன் மெக்முல்லன் அதிரடியுடன் விளையாடி 41 ரன்கள் எடுத்தார். இறுதியில் ஸ்காட்லாந்து அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 207 ரன்கள் எடுத்துள்ளது. இதையடுத்து 208 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இத்தாலி அணி பேட்டிங் செய்ய உள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com