டி20 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியா - இங்கிலாந்து இன்று மோதல்

2-வது அரையிறுதியில் நடப்பு சாம்பியனான இந்திய அணி, முன்னாள் சாம்பியன் இங்கிலாந்தை எதிர்கொள்கிறது
டி20 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியா - இங்கிலாந்து இன்று மோதல்
Published on

மும்பை,

10-வது டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இறுதிகட்ட ஆட்டங்கள் இந்தியாவில் நடந்து வருகிறது. இதில் மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் இன்று (வியாழக்கிழமை) அரங் கேறும் 2-வது அரையிறுதியில் நடப்பு சாம்பிய னான இந்திய அணி, முன்னாள் சாம்பியன் இங்கிலாந்தை எதிர்கொள்கிறது. இதையொட்டி இரு அணி வீரர்களும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

ஏறக்குைறய சரிசம பலத்துடன் இரு அணிகளும் மல்லுகட்டுவதால் யாரு டைய கை ஓங்கும் என்பதை கணிப்பது கடினம். யார் வெற்றி பெற்றா லும் 4-வது முறையாக இறுதிப்போட்டிக்குள் நுழைவார்கள். ஆனால் உள் ளூர் ரசிகர்களின் ஆதரவு இந்தியாவை உற்சாகமுடன் விளையாட தூண்டும்.

சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இவ்விரு அணிகள் 29 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் 17-ல் இந்தியாவும், 12-ல் இங்கிலாந்தும் வெற்றி பெற்றுள்ளன. உலகக் கோப்பையில் 5 ஆட்டங்களில் மோதிய தில் இந்தியா 3-2 என்று முன்னிலை வகிக்கிறது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com