டி20 உலகக்கோப்பை அரையிறுதி: இந்தியா - இங்கிலாந்து ஆட்டம் மழையால் பாதிப்பு


டி20 உலகக்கோப்பை அரையிறுதி: இந்தியா - இங்கிலாந்து ஆட்டம் மழையால் பாதிப்பு
x
தினத்தந்தி 27 Jun 2024 10:10 PM IST (Updated: 27 Jun 2024 11:14 PM IST)
t-max-icont-min-icon

ரோகித் சர்மா 37 ரன்களுடனும், சூர்யகுமார் யாதவ் 13 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.

கயானா,

இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள 9-வது டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் அரையிறுதி ஆட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இதில் இன்று நடைபெற்று வரும் இரண்டாவது அரையிறுதி ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன் ஆன இந்தியாவும், நடப்பு சாம்பியன் ஆன இங்கிலாந்து அணியும் மோதி வருகின்றன.

இந்த ஆட்டத்திற்கான டாஸ் போடப்பட்டது. அதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோஸ் பட்லர் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். இதன்படி இந்திய அணி முதலாவதாக களமிறங்கி பேட்டிங் செய்தது. இந்திய அணி 8 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 65 ரன்கள் எடுத்திருந்த போது மழை குறுக்கிட்டது. இதன் காரணமாக ஆட்டம் தர்காலிகமாக நிறுத்தப்பட்டு உள்ளது. ரோகித் சர்மா 37 ரன்களுடனும், சூர்யகுமார் யாதவ் 13 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.

1 More update

Next Story