டி20 உலகக்கோப்பை தொடர்: சென்னையில் நடைபெறும் போட்டிகள் விவரம்

சென்னையில் மட்டும் 7 ஆட்டங்கள் நடைபெற உள்ளது.
டி20 உலகக்கோப்பை தொடர்: சென்னையில் நடைபெறும் போட்டிகள் விவரம்
Published on

மும்பை,

டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் மும்பையில் இன்று தொடங்குகிறது. இதன் தொடக்க ஆட்டத்தில் இந்திய அணி அமெரிக்காவை இன்று எதிர்கொள்கிறது. போட்டிகள் இந்தியாவில் அகமதாபாத், மும்பை, சென்னை உள்ளிட்ட 5 நகரங்களிலும், இலங்கையின் பல்லேகல்லேயிலும் நடைபெற உள்ளன. இதில் சென்னையில் மட்டும் 7 ஆட்டங்கள் நடைபெற உள்ளது. அதன் விபரம் பின்வருமாறு;

1.வருகிற 8-ந்தேதி ஆப்கானிஸ்தான் - நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன. இந்த ஆட்டம் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் காலை 11 மணிக்கு தொடங்குகிறது.

2. பிப்ரவரி 10-ந்தேதி நியூசிலாந்து - ஐக்கிய அரபு அமீரகம் அணிகள் மோதுகின்றன. இந்த ஆட்டம் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் பிற்பகல் 3 மணிக்கு தொடங்குகிறது.

3. பிப்ரவரி 13-ந்தேதி நெதர்லாந்து - அமெரிக்கா அணிகள் மோதுகின்றன. இந்த ஆட்டம் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இரவு 7 மணிக்கு தொடங்குகிறது.

Also Read
டி20 உலகக்கோப்பை தொடர்: இந்திய அணியின் முக்கிய வீரர் விலகல்
டி20 உலகக்கோப்பை தொடர்: சென்னையில் நடைபெறும் போட்டிகள் விவரம்

4. பிப்ரவரி 15-ந்தேதி நமீபியா - அமெரிக்கா அணிகள் மோதுகின்றன. இந்த ஆட்டம் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் பிற்பகல் 3 மணிக்கு தொடங்குகிறது.

5. பிப்ரவரி 17-ந்தேதி கனடா - நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன. இந்த ஆட்டம் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் காலை 11 மணிக்கு தொடங்குகிறது.

6. பிப்ரவரி 19-ந்தேதி ஆப்கானிஸ்தான் - கனடா அணிகள் மோதுகின்றன. இந்த ஆட்டம் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இரவு 7 மணிக்கு தொடங்குகிறது.

7. சூப்பர் 8 சுற்று போட்டியின் ஒரு போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் பிப்ரவரி 26-ந்தேதி நடைபெற உள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com