

சார்ஜா,
7-வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய், அபுதாபி, சார்ஜா ஆகிய நகரங்களில் நடந்து வருகிறது. இதில் சூப்பர்-12 சுற்றில் பங்கேற்றுள்ள 12 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன.
இதன்படி குரூப்-1ல் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, தென்ஆப்பிரிக்கா, வெஸ்ட் இண்டீஸ், இலங்கை, வங்காளதேசம், குரூப்-2ல் இந்தியா, பாகிஸ்தான், நியூசிலாந்து, ஆப்கானிஸ்தான், ஸ்காட்லாந்து, நமிபியா ஆகிய அணிகள் இடம் பெற்றுள்ளன. ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் முடிவில் இரு பிரிவிலும் டாப்-2 இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு முன்னேறும்.
இந்த நிலையில் இன்று மாலை 3.30 மணிக்கு தொடங்கும் ஆட்டத்தில் தசுன் ஷனகா தலைமையிலான இலங்கை அணி, மக்முதுல்லா தலைமையிலான வங்காளதேசத்துடன் மோதுகிறது. இதில் டாஸ் வென்ற இலங்கை அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.
இன்றைய ஆட்டத்தில் இரு அணிகளிலும் இடம்பெற்றுள்ள வீரர்களின் பட்டியல் வருமாறு;-
வங்காளதேசம்: முகமது நைம், லிட்டன் தாஸ், ஷகிப் அல் ஹசன், முஷ்ஃபிகுர் ரஹிம், மஹ்முதுல்லா(கேப்டன்), அபிஃப் ஹுசைன், நூருல் ஹசன், மஹேதி ஹசன், முகமது சைஃபுதீன், நசும் அகமது, முஸ்தாபிஜூர் ரஹ்மான்.
இலங்கை: குசல் பெரேரா, பதும் நிசாங்கா, சரித் அசலங்கா, அவிஷ்கா பெர்னாண்டோ, பானுக ராஜபக்ச, தசுன் ஷனகா(கேப்டன்), வனிந்து ஹசரங்கா, சாமிக்க கருணாரத்னே, துஷ்மந்த சமீரா, பினுரா பெர்னாண்டோ, லஹிரு குமாரா.