டி20 உலகக் கோப்பை: இலங்கை - பாகிஸ்தான் அணிகள் இன்று மோதல்

பாகிஸ்தானுக்கு அரையிறுதிக்கான கதவு திறந்துள்ளது.
டி20 உலகக் கோப்பை: இலங்கை - பாகிஸ்தான் அணிகள் இன்று மோதல்
Published on

கொழும்பு,

10-வது டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் திருவிழா இந்தியா மற்றும் இலங்கையில் நடந்து வருகிறது. இதில் சூப்பர் சுற்று முக்கியமான கட்டத்தை எட்டியுள்ளது. இன்று நடைபெறும் ஆட்டத்தில் இலங்கை - பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன

இலங்கை அணி சூப்பர் சுற்றில் இங்கிலாந்து, நியூசிலாந்திடம் அடுத்தடுத்து தோற்று அரையிறுதி வாய்ப்பை பறிகொடுத்தது.

முன்னாள் சாம்பியனான பாகிஸ்தான் அணி ஒரு முடிவில்லை. ஒரு தோல்வி (இங்கிலாந்துக்கு எதிராக) என ஒரு புள்ளியுடன் 3-வது இடத் தில் இருக்கிறது. நியூசிலாந்து அணி, இங்கிலாந்திடம் தோல்வியடைந்ததால் பாகிஸ்தானுக்கு அரையிறுதிக்கான கதவு திறந்துள்ளது. இலங்கைக்கு எதிரான இன்றைய ஆட்டத்தில் பாகிஸ்தான் இமாலய வெற்றி கண்டு. ரன்ரேட்டிலும் நியூசிலாந்தை முந்தினால் அரையிறுதி வாய்ப்பை பெற்று விடும். அதாவது முதலில் பேட் செய்தால் குறைந்தது 64 ரன் வித்தியாசத்திலோ அல்லது 2-வது பேட்டிங் செய்தால் 13.1 ஓவருக்குள் இலக்கை விரட்டிப் பிடித்தாலோ அதிர்ஷ்டம் அடிக்கும்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com